சிற்றுண்டிச்சாலைகளை பாடசாலைகளில் மீள திறப்பதற்கு அனுமதி…!!!

80

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், சுகாதார வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதற்கும் அனுமதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு கருத்து குறிப்பிட்டுள்ளது.

எனினும் இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலையில் மாணவர்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.