பசுக்களை இறைச்சிக்காக வெட்ட தடை – இராதாகிருஷ்ணன் வரவேற்பு!

71

இறைச்சிக்காக பசுவை கொல்வதை தடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்த முடிவை நாங்கள் ஆதரிக்கின்றோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த இறைச்சியை உண்பவர்களுக்கு மாற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுவதை தொடர்பில் உலகத்தில் அதிகமான எதிர்ப்புக்கள் உள்ள நிலையில் பிரதமரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.