மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி.

58

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

சதம்டனில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதற்கு அமைய 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.