இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் பப்ஜி தடை..!!

27

பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிக்கப்பட்டதால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுவதாக கூறும் பகீர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்தார் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பப்ஜி-க்கு தடை விதிக்கும் நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மேலும் அதிகமாக பாதிக்கும் என அமர்த்தியா சென் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதே தகவலை திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் தனது ட்விட்டரில் ரீட்விட் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.