கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது…!!!

77

நாட்டில் எட்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று(வியாழக்கிழமை) இனம் காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஐவருமே இவ்வாறு தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 155 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரையில் இரண்டாயிரத்து 955 பேர் குணமடைந்துள்ளனர். 188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது .