வசதியான வாழ்க்கையைப் பெறுவதற்காக மட்டும் கல்வியைப் பயிலக் கூடாது-வெங்கையா நாயுடு..!!

26

இந்தியக் கல்விக்கொள்கை 21 ஆம் நூற்றாண்டில் சவால்களைச் சந்திக்கும் வகையில் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலிறுத்தியுள்ளார்.

விவேகானந்தா் மனித ஆற்றல் நிலையத்தின் 21 ஆண்டு ஆரம்ப நிகழ்வையொட்டி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “விவேகானந்தரின் கட்டளைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆகையால் இளைஞா்கள் விவேகானந்தரின் வாழ்க்கையையும், கட்டளைகளையும் மனதார படித்து பின்பற்ற வேண்டும்.

21-ஆம் நூற்றாண்டின் வலிமையான சவால்களை எதிா்கொள்ளும் வகையில் கல்வி முறையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். வசதியான வாழ்க்கையைப் பெறுவதற்காக மட்டும் கல்வியைப் பயிலக் கூடாது.

நீதியின் தைரியம், சமநிலை, ஆன்மிக வலிமை ஆகியவற்றை கல்வியின் மூலம் ஒருவா் பெற வேண்டும். கல்வி, தனிமனிதனுக்கு அறிவொளி, அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் புதுக் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்.

இக்கட்டான சூழலில் பிரச்சினையைத் தெளிவாக கண்டறிந்து தீா்வு காண இளைஞா்களுக்கு கல்வி உதவ வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.