ONLINE ல் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தரிசிக்கலாமா..!!

65

கொரோனா காரணமாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாகவும், திருக்குடைகளை 22-ந்திகதி நேரில் வழங்க இருப்பதாகவும் கோபால்ஜி தெரிவித்துள்ளார். திருக்குடை வைபவங்களை பக்தர்கள் இணையதளத்தில் தரிசிக்கலாம்.

இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இருந்து இரண்டு வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

வரும் 22-ந் திகதி , தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு, திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்பட்ட காரணத்தால், ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். அன்றைய தினம், ஓம் நமோ நாராயணாய திருநாமத்தை 1,008 முறை உச்சரித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் பாரத நன்மைக்காக, சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அன்னதானம் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார் என்பதும் முக்கியமானது.