உலகம் இவர்களால் தான் ஆபத்தாக மாறுகிறது – ஓவியா..!!

64

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.

எத்தனை பிக்பாஸ் சீசன்கள் வந்தாலும் ஓவியாவின் இடத்தை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் அவர் அவ்வவ்போது ருவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளையும் இட்டு வருகிறார். அவ்வாறு அவர் தற்போது இட்டுள்ள பதிவொன்று வைரலாகி வருகின்றது.

குறித்த பதிவில், இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது தீயவர்களால் இருக்காது. ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது.