தேசிய பட்டியல் பிரதிநிதிகளை அறிவிப்பதில் தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி…!!!

94

நாடாளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் தேசிய பட்டியல் பிரதிநிதிகளின் பெயரை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் எங்கள் மக்கள் கட்சியும் இன்னும் தங்கள் கட்சிகளுக்கான தேசிய பட்டியல் பிரதிநிதிகளின் பெயரை இன்றுவரை வெளியிடவில்லை.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, கட்சிக்குள் அதிகாரப் போராட்டங்கள் ஏமாற்றமளிப்பதாக தகவல் தெரிவித்தார்.

மேலும் நாட்டிற்கான சேவையின் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் காரணமாகவே அரசியல் தொடர்பாக பொதுமக்களுக்கு பெருகிய ஏமாற்றம் காணப்படுவதாகவும் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.