இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

79

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மென்சஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஒயின் மோகன் 42 ஓட்டங்களையும் ஜோய் ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் சம்பா 3 விக்கெட்டுக்களையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரோன் பிஞ்ச் 73 ஓட்டங்களையும் மானஸ் லபுஸ்ஷேன் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுக்களையும் வோக்கர்ஸ் மற்றும் எஸ்.எம்.கரன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஜொப்ரா ஆச்சர் தெரிவானதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.