கொழும்பு நகரின் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல்…!!!

56
இன்று தொடக்கம் வீதி ஒழுங்குச் சட்டம் காரணமாக கொழும்புக்கு அருகே உள்ள பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம் கொடா வீதி திசையில் மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க சந்தி வரையில் இவ்வாறு வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தது.

அதேபோல, பேலியகொடை மற்றும் களனி பாலத்திற்கு அருகில் கொழும்பு-கண்டி வீதியிலும் நுகேகொடையிலிருந்து ஹைலெவல் வீதியிலும் இவ்வாறு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல, தெஹிவனை மற்றும் கொஹூவளையிலிருந்து காலி வீதிக்கு பிரவேசிக்கும் பகுதிகளிலும் இவ்வாறு வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.