வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- 14 வயது சிறுவன் பலி …!!!

125

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி சென்ற உந்துருளி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய உந்துருளியின் சாரதி தப்பி சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உந்துருளியில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.