About Us

“நாமும் நமக்கோர் நலியா கலையுடையோம்”

தமிழும் கலையும் இரண்டற கலந்த யாழ் மண்ணிலிருந்து உலகெங்கும் பரந்துவாழும் எம் தமிழ் மக்களின் உள்ளங்களோடு பேசும் முயற்சியே எமது Big Fm!

“தேனமுத தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல்” என்பதற்கிணங்க எம் வாழ்வியலை எடுத்தியம்ப வேண்டியது இளைஞர்களின் கட்டாய கடைமையாக இருக்கின்றது அதனை முன்னெடுக்கின்றது Big FM, நாளுக்கொரு வானொலியென முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் திறமைமிகு எம் இளைஞர்களின் ஒருங்கினைவிலும் சிறப்பான வழிகாட்டலிலும் வித்தியாசமான பயனுள்ள நிகழ்ச்சிகளோடு யாழ்மண்ணில் இருந்து நாடுமுழுதும் மட்டுமல்லாமல் கடல்கடந்தும் உலகத்தமிழ் சொந்தங்களை மகிழ்விப்போம் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை!

எல்லா விதத்திலும் எம்மை ஊக்கப்படுத்தி ஆதரவுகளையும் அன்பினையும் எம் தாய்தமிழ் சொந்தங்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறது எம் பயணம்!