சப்பாத்தி, தோசை, இட்லி, நாண், இடியப்பத்திற்கு என தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை குருமா
சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முட்டை குருமா
தேவையான பொருட்கள் :
முட்டை – 5
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
தக்காளி – 1
பெ.வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
சோம்பு, கிராம்பு, கசகசா – சிறிதளவு
தேங்காய் துருவல் – கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் – சிறிதளவு
சாம்பார் பொடி – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை :
*தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
*முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
*சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
*வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
*வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
*இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
*நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.
*அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.
*நன்கு வெந்ததும் சூப்பரான முட்டை குருமாவை கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறி கொள்ளலாம்.






