பொதுவாக முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.
முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.
அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில எளியகுறிப்புகளை உள்ளன. தற்போது முகப்பருவை விரட்டும் ஒர சூப்பரான வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.
- சருமத்தில் வெள்ளை திட்டுகள் இருந்தால் பன்னீரை தேனுடன் கலந்து மசித்து பயன்படுத்தினால் பித்தத்தால் வரும் வெள்ளை திட்டு குறையக்கூடும்.
- பாகற்காயை சாறாக்கி முகப்பருக்கள் மீது பயன்படுத்தும் போது அவை வடுக்கள் இல்லாமல் குணமாகும். துளசியையும் முகப்பருவுக்கு பயன்படுத்தலாம்.
- கிராம்பை பேஸ்ட் ஆக்கி முகப்பருவின் மீது தடவி கொள்ளலாம். எலுமிச்சை நீர்த்து முகப்பருவின் மீது தடவலாம். சரும தோஷங்களுக்கு ஏற்ப பயன்படுத்துவது அவசியம்.
- கற்றாழை ஜெல்லை சருமத்துக்கு உண்டாகும் காயங்களை வெகுவிரைவில் குணப்படுத்தும் பண்புகளை கற்றாழை ஜெல் இயற்கையாகவே கொண்டுள்ளது.
- பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.
- வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
- எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.






