முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும்.
மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும். உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம்.தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஆலிவ் ஆயில் – 100 கிராம்
- ஆளி விதை – 3 ஸ்பூன்
- ஆரஞ்சு பழத்தோல் – 1
செய்முறை
- ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காய வைத்து அதை மிக்ஸியில் அரைத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஆரஞ்சுத் தோல் பவுடர் கடைகளில் விற்கப்படும் வாங்கிக்கொள்ளலாம். ஆளி விதைகளையும் மிக்ஸியில் அடித்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஆளி விதை பொடிகளை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
- அடுத்ததாக அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் நடுவே கலந்து வைத்துள்ள எண்ணெய் கிண்ணத்தை வைத்து பின் அதை அடுப்பில் வைத்து பற்ற வையுங்கள். பத்து நிமிடங்கள் சூடேறும் வரை அப்படியே வையுங்கள். தீ அதிகமாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும்.
- 10 நிமிடங்கள் கழித்து அந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டினால் பொடிகள் இறுகி எண்ணெய் மட்டும் கிடைக்கும். அந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தூங்கும் முன் ஒரு சொட்டு தடவி மசாஜ் செய்துகொண்டு படுக்கவும்.
- மறுநாள் காலை முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும் இல்லையெனில் முகத்தில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊற வைத்தும் உடனே கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்ய முகத்தில் சுருக்கங்கள் மறைந்து என்றும் இளமையாக ஜொலிப்பீர்கள்.






