பொதுவாக வெயிலில் வெளில அலைந்து, திரிந்து வேலைபார்க்கும் ஆண்களுக்கு சருமம் எப்பொழுதும் கருமையாகவும், வறண்டும், பொலிவிழந்து காணப்படும்.
இருப்பினும் ஆண்கள் தங்களது சரும அழகை பற்றி என்றும் கவலை படமாட்டார்கள், இருந்தாலும் ஆண்களின் சரும அழகை அதிகரிக்க இந்த பகுதியில் இயற்கை அழகு குறிப்புகள் நிறைய உள்ளது, இவற்றை சரியான முறையில் செய்தால் நல்ல பயன்கிடைக்கும்.
அதில் மாதுளை மிகப்பெரிதும் உதவுகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

- என்றும் இளமையாக இருக்க மாதுளை தோலை பொடி செய்து, அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் நீர், 1 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தேய்த்து வந்தால் முகம் என்றும் பதினாறு போல் இளமையாக மின்னும். வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.
- பல ஆண்களின் முகம் கலை இழந்து மிகவும் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் மாதுளை தோலை பொடி செய்து தேன், எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சொரசொரப்புகள் நீங்கும்.
- 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, ரோஸ் நீர், பொடி செய்த மாதுளை தோல், பொடி செய்த ஆரஞ்ஜ் தோல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும். அத்துடன் அதிகப்படியான பிசுபிசுப்புகளும் சரியாகும்.
- ஆண்கள் அடிக்கடி வெளியில் செல்வதால் தூசுப்பட்டு முகத்தில் வறட்சி ஏற்படும். இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல்,1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். வாரத்திற்கு 2 முறை இதனை தொடர்ந்தால் முகம் மென்மையாக மாறும்.
- உங்கள் முகம் முகப்பருக்கள் இன்றி மாற 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், பொடி செய்த மாதுளை தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.
- ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால், மாசுக்கள் படிந்து கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல், 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் அவகடோ எண்ணெய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும்.






