பெண்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள பல செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். அழகு சாதன பொருட்கள் விலையும் அதிகம் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
நாளடைவில் பிரச்சினைகள் தீவிரமடையும் ஒழிய நிவாரணம் பெரும்பாலும் தருவதில்லை.இதனால் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றது.
எனவே செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கை நமக்களித்தப் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.

- கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
- இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.
- இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.
- பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
- கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும்.






