முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான்.
அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.
அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
தொல்லையை தரும் முகப்பரு பிரச்சினையிலிருந்து உடனடி விடுதலை வேண்டுமா? | Is Acne A Problem
கொத்தமல்லி இலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவுபெறும். முகப்பரு தொந்தரவும் குறையும்.
ஒரு கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து, முகத்தில் பூசுங்கள். உலர்ந்த பின்பு கழுவுங்கள். துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையும் தீரும்.
முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
மஞ்சள் தூள், புதினா சாறு கலந்து, உங்கள் முகப்பரு வடுக்களுக்கு தடவலாம். இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை நம்மை அண்டாது.






