வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை. நிறைய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி
செய்யுங்கள்.
1. பாதாம் எண்ணெய்
- உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது.பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.
2.பச்சை நிற ஆப்பிள்
- பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.
3.கடலை மாவு
- கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும்.
4.தேன்
- தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும்.
5.கடலை எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.
6.பால்
- பரு,கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு காய்ச்சிய 1 கப் பால் குளிர்ந்த பிறகு 1/2 எலுமிச்சையை பிழிந்து,கலந்து கழுவினால் நல்லது.
7.தயிர்
- கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.
8.மஞ்சள்
- கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்







