பொதுவாக நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் கருந்திட்டுகள்.
இது நிறைய பேருக்கு இரண்டு கன்னத்திலும் இந்த கருந்திட்டுகள் பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும். இதை போக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.
ஆனால் கொஞ்சம் முயற்சி செய்து சரியான இயற்கையான பொருட்களை தொடர்ந்து முகத்தில் போட்டு வந்தால் சீக்கிரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்துவிடமுடியும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கருந்திட்டுகளையும் போக்க வேண்டுமா? | Want To Get Rid Of Any Dark Spots On The Skin
Image – istockphotos
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை நன்றாக சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பின்னர் மெதுவாக ஸ்க்ரப் செய்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
பழுத்த பப்பாளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றை 4-5 க்யூப்ஸ் எடுத்து கொள்ளுங்கள். அவற்றை அரைத்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும். இப்போது பேஸ்ட்டை சருமத்தில் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு பின் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
4 ஸ்பூன் மைசூர் பருப்பை முதல் நாள் இரவே பாலில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் இந்த ஊறவைத்த பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தை கழுவிவிட்டு அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். அதன்பிறகு மிதமான வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர பழுப்பு நிறம் மாறி சருமம் பொலிவு பெறும்.
எலுமிச்சை ஜூஸ் எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது வெள்ளை சர்க்கரை சேர்த்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. 5 நிமிடங்கள் வரை இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து மென்மையாக மசாஜ் செய்யுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.






