பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனைகளுள் கருவளையம் ஒன்றாகும்.
இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது.
அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.
இதனை எளியமுறையில் கூட போக்க முடியும்.. தற்போது அவற்றில் ஒரு எளியவழிமுறையை இங்கே பார்ப்போம்.
கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை ஒரு வாரத்திலேயே போக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ் | Want To Get Rid Of Dark Circles Around The Eyes
image – brisbaneskin
தேவையானவை
வெள்ளரிக்காய் 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு 3 துண்டுகள்
தேன் 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல் 1 ஸ்பூன்
செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் உருளை கிழங்கு துண்டுகளை தனித்தனியாக துருவி அதன் சாற்றை மற்றும் எடுத்து ஒன்றாக இணையுங்கள்.
இதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலந்து கொள்ளுங்கள். இயற்கை பூச்சு தயாராகி விட்டது.
இதனை கண்களை சுற்றி தடவும் முன்னர் பன்னீரை பஞ்சுகளில் நனைத்து உங்கள் கண்களை சுற்றி துடைத்து ஆற விடுங்கள்.
அதன் பின்னர் நன்கு கலக்கப்பட்ட இந்த கலவையை உறங்குமுன் கண்களில் தடவி விடுங்கள். மறுநாள் காலை இதனை கழுவுங்கள்.
ஒரு வாரத்திலேயே நல்ல பலன்கள் கிடைத்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.






