காலநிலை மாற்றங்களால் உதடுகளில் வறட்சி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது, உதடுகளின் மீதுள்ள ஈரப்பசையானது வெளியேற்றப்பட்டு, வறட்சியை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல், காலநிலை மாறும் போது, அதிகப்படியாக வேலையின் காரணமாக வெளியே சுற்ற வேண்டியிருப்பதால், குறிப்பாக குளிர்காலம், கோடைகாலம் போன்றவற்றின் போது மேற்கொள்ளும் போது, உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புக்கள் ஏற்படுகிறது.
எனவே இக்காலங்களில் உதடுகளை தவறாமல் பாவிக்க வேண்டும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
- ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
- தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
- வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.
- ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.






