முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர்.
நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல.
இதற்கு மாதங்கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.
சொட்டை விழாமல் தடுக்கும் மூலிகை எண்ணெய்
- செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
- செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள்
- தேங்காய் எண்ணெய் – 1 கப்
- துளசி – 5 இலைகள்
- வெந்தயம் – சிறிதளவு
செய்முறை
- செம்பருத்தி பூ மற்றும் இலை, துளசிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஆறியபின் 4 நாட்களில் வெயில் வைத்துவிடுங்கள்.
- பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும். குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும்.
- வாரம் ஒரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.






