குளிப்பது என்பது சுகாதாரமான ஒரு செயல் என்றே கருதப்படுகிறது. தினமும் குளிக்காமல் இருப்பதால், அனைவரது உடலிலும் ஒரே மாதிரியான தாக்கங்கள் ஏற்படுவது இல்லை.
2 நாட்களுக்கு குளிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? உடலில் 1000 வகையிலான பக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும். இவை, சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. இதனால், சருமத் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நமது உடலானது சுயமாகவே ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை தீய தாக்கத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.
இரண்டு நாட்கள் குளிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? | Bath Skip Two Days Tamil
edition.cnn
அன்றாடம் நம் உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால், நாம் தினமும் குளிக்க வேண்டும்.
இதனால் நமது உடலை இயற்கையாக வலுப்படுத்த முடிகிறது. தேய்த்து குளிக்கும் போது, கண்கள், காதுகள், தொடை மற்றும் மூக்கு ஆகிய உறுப்புகளின் இடுக்குகளில் சரியாக தேய்த்து குளிக்க வேண்டும்.
ஏனெனில் அந்த பகுதிகளில் மட்டும் பக்டீரியாக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும்.
உடல்நிலை குறைவாக இருந்தாலும், கூட இதமான நீரை கொண்டு அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் தண்ணீரைக் கொண்டு துடைத்து விட வேண்டும். இது பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும்.
சிலர் வியர்வை அதிகமாக வரவில்லை எனில், குளிர் காலங்களில் ஒரு நாள் குளிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இது முற் றிலும் தவறு. வியர்வை சுரக்க வில்லை எனிலும் கூட உடலில் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தாக்கம் ஏற்படும். எனவே, குளிர் காலமாக இருப்பினும் தினமும் குளிக்க வேண்டியது அவசியம்.
இரண்டு நாட்கள் குளிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? | Bath Skip Two Days Tamil
eatthis.com






