புத்தளம் மாவட்டத்தின் ஆனைவிழுந்தானில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ரம்சார் ஈரவலையத்தின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகரே இந்த திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட இயந்திர சாரதியிடம், காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் குறித்த வர்த்தகரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






