தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன், நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார் .
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.
பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாத செல்வராகவன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் மனம் குளிர செய்துள்ளது. தத்துவங்கள், கேள்வி பதில்களை பகிர்ந்து வரும் செல்வராகவன் தற்போது ‘நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது. ஆனால் அன்பாக பேசி நண்பனாய் பாவித்து “இந்த உலகத்தை துன்புறுத்தாதே” என்று சொன்னால் அது கேட்டுக் கொள்ளும்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.என்பதும் குறிப்பிடத்தக்கது .






