கொரோனா நோய் எல்லா துறையையும் பாதித்தது போல் சினிமா துறையும் அதிகமாக பாதித்துள்ளது.
இந்த நோய் காரணமாக படப்பிடிப்பு முதல் ரிலீஸ் வரை அனைத்தும் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் அரசு தரப்பில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் எண்ணம் இல்லை என கருத்து கூறியிருந்தனர்.
இதனால் படம் தயாராகி திரையரங்கிற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் OTT ரிலீஸ் முடிவுக்கு வந்துவிட்டனர்.
அதன்படி அண்மையில் சூர்யா தனது சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக தகவல் கூறியிருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகிறது
ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது .






