கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார், குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 640 பேரே இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.






