கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு வருகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று கூறலாம்.
அப்படி தொற்றுக்குள்ளானவர்களில் ஒருவர் தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சில வாரங்களாக மிகவும் மோசமான நிலைமையில் இருந்தார்.
அவருக்காக ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டனர். அவரது மகன் சரண் அவர்களும் தினமும் எஸ்.பி.பி உடல்நிலை எப்படி உள்ளது என்று அப்டேட் கொடுத்து வந்தார்.
தற்போது அவருடைய மகன் கூறியிருக்கிற விடயம் எல்லோரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் நெகட்டீவ் வந்துள்ளதாம்.
இந்த விடயம் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறலாம்…






