கருப்பு உளுந்தில் ஒட்டுமொத்த ஊட்டச் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது.
தினமும் அளவாக உணவில் எடுத்து கொண்டால் ஆரோக்கிய நன்மைகளை பெற்று கொள்ள முடியும்.
கருப்பு பருப்பில் உள்ள சத்துக்கள்
- நார்ச்சத்து
- இரும்பு
- சுண்ணாம்பு
- ஃபோலிக்
- மெக்னீசியம்
- பொட்டாசியம்
- புரதம்
- கொழுப்பு
- மாவுச்சத்து
- உயிர்சத்து பி
நன்மைகள்
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்யும்.
அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோயை தடுக்கும் சக்தி கருப்பு உளுந்தில் உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி சாப்பிடலாம். இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.






