எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், எனினும் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், அதேவேளை தொடர்ச்சியான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும், நிதியமைச்சர் விலையேற்றத்தை முன்மொழியவில்லை என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதேவேளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்
வரி விதிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அநீதி ஏற்படுமா இல்லையா என்பது குறித்தும் எதிர்காலத்தில் வரி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் அமரவீர
இதன் போது தெரிவித்தார்.






