கொழும்பு பாதுக்க சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதயில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டபோது தப்பி சென்றுள்ளார் என்று கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுக்க சிறைச்சாலை அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
குருநாகல் வேவல்வெல போப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
குறித்த கைதி, 05 அடி 05 அங்குலம் உயரமும் மாநிறமான சராசரியான உடல்வாகும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதி தப்பி செல்லும்போது வெள்ளைநிற காற்சாட்டை மற்றும் மேல்சட்டை அணிந்திருந்துள்ளார்.
தப்பி சென்ற கைதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.






