யாழ்., வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தனிடம் இராணுவத்தினர் இன்றிரவு விசாரணை நடத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன், தனது வீட்டுக்கு முன்பாக மாவீரர் நினைவேந்தலையொட்டி இன்று மாலை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் வந்த இராணுவத்தினர் தவிசாளரை அழைத்துச் சுடர் ஏற்றிய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தினர் எனவும், தன்னுடைய வீட்டில் விளக்கேற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தான் அவர்களிடம் தெரிவித்தார் எனவும் சுகிர்தன் கூறினார்.






