பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடந்த வாரங்களில் வெளியேறி இருந்தவர் தான் இசைவாணி.
இவர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் பேட்டிகள் கொடுத்து வந்த நிலையில், தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்தை பற்றியும் பேசியுள்ளார்.
அதில், இசைவாணிக்கும், கானா பாடகர் ஸ்ரீ காந்த் தேவா என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது. தன்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக நான் அதை வெளிப்படுத்தாமல் இல்லை.
அது எனக்கு தேவையில்லை அந்த நினைவுகள் வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், திருமண வாழ்க்கையில் மனம் நொந்து இதோடு தன்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணிய நேரத்தில், இவரை மீண்டும் தேற்றி கொண்டுவந்தது, இவருடைய கானா பாடல்கள் தான் என்றும் கூறியுள்ளார்.






