கொழும்பு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள், நடத்தப்பட்ட நிகழ்வுகள், குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாக பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்று சிவகரன் தெரிவித்தார்.
குறித்த விசாரணைகள் ஊடாக எம்மைச் சிவில் சமூக செயற்பாடுகளில் இருந்து நிறுத்தும் வகையிலும், எமது ஜனநாயகக் குரல்வளையை நசுக்கும் விதமாகவும் அவர்களின் கேள்விகள் காணப்பட்டன என்றும் சிவகரன் மேலும் கூறினார்.






