நியூசிலாந்துக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள மக்வாரி தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு ரிச்டெர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் சேதம் குறித்து
உடனடி தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.






