நாட்டில் அண்மைகாலமாக எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு இடம்பெற்று வரும் நிலையில் இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நட்சத்திர விருந்தங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், உணவு தயாரிப்புக்காக விறகு அடுப்பைப் பயன்படுத்துவது பிரதான மாற்றுவழியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில் சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.






