தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது தனது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் மாறன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அப்படமும் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவியாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது தனுஷ் அவரின் மகன் யாத்ராவுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப்பா மகன் இருவரையும் கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.






