சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகின்றது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தகவல் எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்குசரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்“ எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






