இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளன.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையுமென அபாய எச்சரிக்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும்.
தற்போது நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






