இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அடித்த பந்து பீர் கிளாஸை தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் டேரில் மிட்செல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 56வது ஓவரை ஜாக் லீச் வீசினார். அந்த ஓவரில் மிட்சேல் சிக்ஸர் விளாசிய பந்து, பார்வையாளர்கள் பகுதியில் பெண்மணி ஒருவர் கையில் வைத்திருந்த பீர் கிளாஸை தாக்கி உடைத்தது.
இதனைக் கண்டு பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர். எப்படியும் அந்த பெண்மணி இன்னொரு கிளாஸ் பீரை பெற்றிருப்பார் என ரசிகர் ஒருவர் வீடியோவை பதிவிட்டிருந்தார்.






