பொதுவாக இரவு நேரங்களில் தூங்குவதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
கேஜெட்களைப் பயன்படுத்துதல், வெகுநேரம் வரை விழித்திருந்து, அதிகாலை வரை தூங்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், போதைப்பொருள் பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், அதிக மன அழுத்தம் போன்றவையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
பகல் நேரம் அடிக்கடி தூங்குவது உடல் நலத்திற்கு பக்கவிளைவுகளே ஏற்படுத்துகின்றது. அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நீங்கள் பகலில் அடிக்கடி தூங்குவீங்களா? எச்சரிக்கையாக இருங்க.. இந்த ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்! | Do You Often Sleep During The Day
image – medicalnewstoday
பகல் நேரம் தூங்குவதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
இரவில் போதுமான தூக்கம் இல்லாததால் பகலில் தூங்கும் போது அது ஒரு பிரச்சனையாக மாறும் என்று ஆய்வு கூறுகிறது.
அடிக்கடி பகல் நேரம் தூங்குவது அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இஸ்கிமிக் பக்கவாதம் ஆகியவற்றின் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இரவில் இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. போதிய தூக்கமின்மை, மீண்டும் செயலில் இறங்குவதற்கு முன் தன்னைப் புத்துணர்ச்சியடையச் செய்யும் பொருட்டு உடலுக்கு சரியான இடைவெளியைக் கொடுக்காது.
அடிக்கடி பகல் நேரத்தில் தூங்குபவர்கள் இரவுநேரத்தில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஒரு ஆராய்ச்சி ஆய்வில், நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு 34% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி தூங்குவது நல்லது?
பகலில் மணிக்கணக்கில் தூங்குவதற்குப் பதிலாக சில நிமிடங்கள் தூங்கலாம். இது குட்டித் தூக்கம் களைப்பைத் தவிர்ப்பதோடு, மூளையின் செயல்திறனைத் திறம்பட வைக்கிறது. சிறந்த தூக்க நேரம் 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.






