சாப்பாட்டில் நெய் சேர்த்து சாப்பிடுவது பலரும் விரும்பி செய்யும் ஒரு விடயம்.
தினமும் நெய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா?
பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.
மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.
சாப்பாட்டில் நெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? | Ghee With White Rice Health
viraly
சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அதன்படி வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும். இதோடு நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டில் நெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? | Ghee With White Rice Health
thisoldgal






