எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விஷேடமுறையில் பரிசோதித்துள்ளது.
கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் ((INSPrabal) இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
அந்த ஏவுகணை கடலில் இன்னொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு சிறிய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்துள்ளதுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நிலவும் நிலையில் கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது.
அதில் தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், பிருத்வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏவுகணைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.






