பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து பாரம்பரியமாக பெறப்பட்ட 12 பந்தய குதிரைகளையும் மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து பாரம்பரியமாக பெறப்பட்ட சிறப்பாகச் செயல்படும் பந்தயக் குதிரைகள் அனைத்தையும் மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூ மார்க்கெட் டாட்டர்சல்ஸ் (Newmarket’s Tattersalls) நடைபெறும் ஏலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் 12 பந்தய குதிரைகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
1952ம் ஆண்டு மன்னர் நான்காம் ஜார்ஜ்-யின் மரணத்தை அடுத்து அவரால் வளர்க்கப்பட்ட குதிரைகள் பாரம்பரியமாக இரண்டாம் எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது, இதன் மூலம் குதிரை பந்தயத்தின் மீது ராணியின் எலிசபெத் காதல் அதிகரித்தது.






