இந்திய வம்சாவளி பெண் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்திள்ளது.
சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வழங்கியுள்ள வாக்குறுதி உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட வேண்டும் எனவும் தாராளவாத ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை அமைச்சர் பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






