“அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்க வேண்டும்” என்று பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்கிற்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(strict eligibility rules) படி பிரித்தானியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 2ஆம் ஆண்டு இறுதி வரை பள்ளியில் உணவை இலவசமாகப் பெறலாம், ஆனால் அதன் பிறகு அது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டது.
இதனால் பல குழந்தைகள் பள்ளி உணவை இலவசமாகப் பெறமுடியாமல் வறுமையின் காரணமாக உணவின்றி தவித்து வருகின்றனர்.
எனவே இந்தக் கடுமையான சட்டங்களை மாற்றியமைத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி உணவை இலவசமாக வழங்கவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமரான ரிஷி சுனக் வரும் நவம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ள வரவு- செலவு தாக்கலில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிவருகின்றனர்.






