உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் சனிக்கிழமை கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
பின்வாங்கிய ரஷ்ய படைகள்
உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப் போரில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை 5 மணிக்கு ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டது என்றும் மேற்குக் கரையில் இராணுவ உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த பின்வாங்குதலை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் கெர்சன் நகரத்தின் மையத்தில் குடியிருப்பாளர்களால் உக்ரைனிய கொடி ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பயன்படுத்தாத ஆயுதங்கள்
இந்த நிலையில் ரஷ்யா இன்னும் அதன் முழு ஆயுதங்களையும் உக்ரைன் மீது பயன்படுத்தவில்லை என்றும், உக்ரைனில் சாத்தியமான அனைத்து எதிரிகளின் இடங்களையும் ரஷ்யா தாக்கவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் சனிக்கிழமை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.






