அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பிடன் தலைமையில் அமெரிக்கா மீண்டும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இணைந்துகொண்டால் வரவேற்போம் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் கார்பன் வாயுவினால் ஏற்படும் சூழல் மாசினைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் தான் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் எப்போதுமே அங்கத்துவம் பெற்றுள்ள பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொண்டால் நாம் வரவேற்போம். நம்மைப் போலவே உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் இவ்விடயத்தினை வரவேற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வரம் அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகுவதாக அறிவித்திருந்தது.
எனினும் குறித்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்துகொன்ளவோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பிடன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






